பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடன் திட்டத்தில் பல்வேறுசிறப்பு சலுகைகள்!! கட்டுமான நிறுவனர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

  -MMH

பாரத ஸ்டேட் வங்கி சார்பாக  வீடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக  கட்டுமான நிறுவனர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது..

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு கடன் தொடர்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் வீட்டுகடன் தொடர்பாக கட்டுமான நிறுவனர்கள் தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கட்டுமானம் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நீரஜ் குமார் பாண்டா செய்தியாளர்களிடம் பேசுகையில்,பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடன் திட்டத்தில்,பல்வேறுசிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும்,வீடுகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டுமானர்கள் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர்,கட்டுமான நிறுவனங்கள்  வீட்டு கடன் பெற,விரைவான சேவையில்,குறைந்த வட்டி விகிதத்தில்,கடன் வழங்க  எஸ்.பி.ஐ.வங்கி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கட்டுமான துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரமான,விரைவான சேவை வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது துணை பொது மேலாளர் திலீப் சிங் உடனிருந்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments