சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி! சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு! !
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, பூராண்டாம் பாளையம், ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர், கள்ளப்பாளையம், குமாரபாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழையில் ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள தற்காலிக மஸ்தூர் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி வீடுகளில் தேவையற்ற சிமெண்ட் தொட்டிகள், மண்பானைகள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்து போன தொட்டிகள் ஆகியயவற்றை அகற்றி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அப்போது, கொசு உற்பத்திக்கு காரணமாகும் வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் டாக்டர்கள் கிருஷ்ணபிரபு, அபிநயா, சுந்தர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments