ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை!!

 

  -MMH

   ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு கடைகள் இன்னும் சில தினங்களில் விற்பனை துவங்கிவிடும். இதனால் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதன் மூலம் பல அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் ரயில்வே போலீசார் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் கோவை ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனிப்படை அமைத்து பயணிகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments