செல்போன் காதலால் ஏற்பட்ட விபரிதம்!! விட்டில் பூச்சிகளாக மாறும் இளம் பருவத்தினர்!!

 -MMH

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயதான கல்லூரி மாணவி, இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது வாபிக் (24) என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம்  மூலம் பழக்கம் ஏற்பட்டது.  ஆரம்பத்தில் 2 பேருமே நட்பாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதனால் இருவரும் பரஸ்பரத்துடன் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் முகமது வாபிக் நாம் இருவரும் போனிலேயே பேசிக் கொள்கிறோம்.நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. எனவே நாம் 2 பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என ஒருநாள் அவரை அழைத்துள்ளார். குறிப்பிட்ட  நாளில் இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் சந்தித்து பேசினர்.

அங்கு  2 பேரும் வெகு நேரம் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முகமது வாபிக், அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு  முகமது வாபிக் மாணவியை தொடர்பு கொள்ளவே இல்லை.

மாணவி செல்போனில் அவரை தொடர்பு கொண்டாலும் சுவிட்ஆப் என்று வந்துள்ளது.  இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி சம்பவம் குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னம், முகமது வாபிக் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments