ஓவியத் திறனை மேம்படுத்தும் பயிற்சி மையம் திறப்பு விழா!!

  -MMH

    கோவை; குளோபல் ஆர்ட் எனும் ஓவியத் திறனை மேம்படுத்தும் பயிற்சி  மையம் திறப்பு விழா கோவை காந்திபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று காலை நடைபெற்றது. 

இந்த மையத்தினை சிறப்பு விருந்தினர்களான தமிழ்நாடு, கேரளா மண்டல மேலாளர் கே. ஆர்.மங்கள்சாமி, எலைட் சர்க்கிள் தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த மையம் குறித்து  மையத்தின் உரிமையாளர் டாக்டர். ஐஸ்வர்யா கூறுகையில்,  உலக அளவில் 21 நாடுகளில் உள்ள குளோபல் ஆர்ட்  எனும் ஓவியத் திறனை மேம்படுத்தும் பயிற்சி மையமானது, இந்தியாவில் 7  மாநிலங்களில் 125 இடங்களில் செயல்பட்டு வருகிறது.  

கோவையில் 11வது கிளையாக காந்திபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஓவியத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவ, மாணவிகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையில் ஓவியங்கள் வரைய பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர் பயிற்சி பெற்று,  பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். இதில் 13  பயிற்சிகள் முடித்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் குழந்தைகள்,  பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments