விரைவில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் அரசுப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு!!

  -MMH
   கோவை சரவணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை 370 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தது.

இது குறித்து பள்ளி சார்பில் பள்ளி கட்டிடத்தை சீரமைத்த தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன்படி 5 புதிய வகுப்பறைகள் கட்ட கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. பின்னர் கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ஷர்மிளா மற்றும் அதிகாரிகள் இந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பள்ளி கட்டிட பணியை உடனடியாக தொடங்கி முடிக்க உத்தரவிட்டனர்.

இது குறித்து துணை ஆணையாளர் டாக்டர் ஷர்மிளா கூறும்போது, வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கட்டு மான பணியை முழுமையாக கட்டி முடிக்க அனைத்து ஏற்பாடு களையும் செய்து வருகின்றோம். விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். 

இந்த ஆய்வின்போது கோவை மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் செந்தில் பாஸ்கர், 28-வது வார்டு செயற்பொறியாளர் வெங்கடாசலம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

- S.ராஜேந்திரன்.

Comments