பாரதிய ஜனதா கட்சியினர் கொடி ஏற்றும் விழா!!

    -MMH

    தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாட்டி பஞ்சாயத்தில் மீனாட்சிபுரம் அடுத்த ராமர் பண்ணை பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்திருக்கும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடிக்கம்பம் வைத்து கொடியேற்றும் விழா நடைபெற்றது. 

இவ்விழாவில் பெருமாட்டி பஞ்சாயத்து பொதுச்செயலாளர் A.அசோக் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து  சிறப்புரையாற்றினார். சித்தூர் தொகுதி செயலாளர் K.லோகு தலைமை தாங்கினார்.  

மேலும் இவ்விழாவில் தொகுதி உறுப்பினர் P.சிவா, பஞ்சாயத்து செயலாளர்கள் R.சூர்யா, M.சுரேஷ் மற்றும் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments