நகைக்கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஆம்பூரில் பரபரப்பு!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாராப் பஜார் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாக எஸ் எம் எஸ் நகைக் கடை உரிமையாளரை காவல்துறையினர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட நகை மற்றும் அடகுகடை வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டம் செய்தனர்.
இப்போராட்டத்தில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகைக்கடை உரிமையாளர்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.-P.ரமேஷ், வேலூர்.
Comments