சாலை விபத்தில் லாரி மெக்கானிக் லாரி மோதி பலி !!

 

-MMH

    சென்னை மாவட்டத்திலுள்ள செட்டி தோட்டம் பகுதியில் மெக்கானிக்கான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை லாரிகளை பழுதுபார்க்கும் பணியினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் ராயர்புரம் சிமெண்ட்ரி சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மாநகரப் பேருந்து ஆகாஷின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் நிலைதடுமாறி கிழே விழுந்த ஆகாஷின் மீது பேருந்தின் சக்கரம் ஏறிஇறங்கியாதல் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆ காஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


இதற்குகிடையில் ஆகாஷின் உறவினர்கள் தீடிரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் இருபுறமும் பேருந்து, கார் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதே விபத்து ஏற்பட காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆகாஷின் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுனரான பாக்கியராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments