பெட்ரோல் டேங்கில் தீக்குசி உரசி பெட்ரோல் செக் செய்த வில்லத்தனம்!!

     -MMH

இருசக்கர வாகனம் திடீரென நின்றதால் பெட்ரோல் இருக்கிறதா என்று ஒருவர் தீக்குச்சியை கொளுத்தி பார்த்ததை அடுத்து வாகனம் தீப்பற்றி எரிந்தது. புதுக்கோட்டை மாவட்டம் தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் பொன்னமராவதியில் கூலிவேலை செய்து வருகிறார். அவர் தனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்துவிட்டு எடுத்துக்கொண்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வரும் போது பாதி வழியிலேயே இருசக்கர வாகனம் நின்றது. வாகனத்தில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்பதை பார்ப்பதற்காக பெட்ரோல் டேங்க் மூடியை திறந்திருக்கிறார்.

இருட்டில் தெரியாததால், தீக்குச்சியை கொளுத்தி பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துள்ளார். இதனால் வண்டி சட்டென்று தீ பற்றிக்கொண்டு மளமளவென எரியத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட தியாகராஜன் தூரமாக ஓடிவிட்டதார். ஆனால் அவரது வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து விட்டது. அதன்பின்னர் அப்பகுதிக்கு வந்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்க , அவர்கள் வந்து கொஞ்சம் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

-N.V.கண்ணபிரான்.

Comments