பண்டிட் தீனதயாளன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த பிஜேபி கட்சியினர்!!
கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி மண்டலம் 99 வது வார்டு சார்பாக இன்று பண்டிட் தீனதயாளன் உபாத்தியாயா அவர்களின், பிறந்தநாளை முன்னிட்டு பிஜேபியின் சார்பாக ஜிடி ஸ்டாண்டில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் குறிச்சி மண்டல செயலாளர்கள் திரு. அஜித் குமார், திரு.கோபி சங்கர், குறிச்சி மண்டல அரசு தொடர்பு தலைவர் திரு.பிரதீப், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மண்டல் தலைவர் திரு.கணேஷ், துணைத் தலைவர் விக்கி அவர்களும், 146 வது வார்டு கிளை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும்
ஐயப்பன், மணி, ஸ்டாலின், சரவணன், பாலா, முருகேசன், மற்றும் உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். விழாவில் கோவை தெற்கு மாவட்ட ஐ.டி விங் செயலாளர் அருண்குமார் அவர்கள், சிறப்புரை வழங்கியதோடு கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
தமிழக தலைமை நிருபர்,
-ஈஷா.
Comments