அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கால உதவித்தொகை வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனு!!
அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கால உதவித்தொகை வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் கோவை மாவட்ட தலைவர் புவனேஸ்வரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் வந்த பாஜகவினர், அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இம்மனுவில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மற்றும் மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித் தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டிருந்தது. தையல், சமையல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பெண் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு வழங்க கூடிய நிதி உதவிகளை எவ்வித இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேட்டி : விஜயலட்சுமி - பாஜக கோவை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு.
-சீனி, போத்தனுர்.
Comments