மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்!!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோவை டவுன்ஹால் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் ஓராண்டு தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் இது அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை டவுன்ஹால் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சீனி,போத்தனூர்.
Comments