பையா கவுண்டர்! - மக்களின் மாசற்ற தலைவனுக்கு குவியும் பாராட்டுகள்..!!!

  -MMH
   கோவை மாவட்டம் கே என் ஜி புதூர் பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் அமர்ந்து தேனீர் அருந்திய திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன்.

கோவை கெஞ்சி புதூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு பையா கிருஷ்ணன் அங்கு துப்புரவு பணி செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளர்களை அழைத்து அங்குள்ள ஒரு தேனீர் கடையில் அவர்களுடன் அமர்ந்து தேனீர் அருந்தினார். அவரின் இந்த செயல் அனைத்துக்கட்சி கட்சி நிர்வாகிகளிடையே  பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 


துப்புரவு பணியாளர்களின் சேவையை மதித்து அவர்களை பாராட்டும் விதமாக அமைந்த இந்த செயல் அவரின் நன் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.  பொதுமக்களில் ஒருவர் கூறுகையில் அண்ணன் எப்பவுமே மக்களோடு மக்களாக கலந்து தான் இருப்பார்கள் மக்களோட மனசுல என்றும் குடியிருக்கும் ஒரு மாசற்ற தலைவன் அவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மக்கள் பணிக்கு நல்ல மனதை போதுமானது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இச்சம்பவம்  அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments