மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்!!

       -MMH

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம்,நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற் சங்கம் மற்றும் மூவேந்தர் மக்கள் பொது நலச்சங்கம் இணைந்து நிறுவனத் தலைவர் திருக்கண்ணன், மாநில பொருளாளர் முரளிகுமார் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலையின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீண்ட காலமாக முன்வைத்து வரும் இக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஒரு பகுதியாக கோவையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதில் ஜெயக்குமார், அன்புராஜ், எழில்பாண்டியன், பாக்சர்பிரேம், 
ராஜ்கண்ணன், நாகர், ஜெயச்சந்திரன் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனுர்.

Comments