கோவை ஆர் எஸ் புரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ; விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்!

-MMH

   கோவை  ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.  கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோவை ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட 4 இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் ரூ.42 கோடியில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- 

4 அடுக்கு கொண்ட வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இங்கு அனைத்தும் சென்சார் அடிப்படை யில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக நவீன ஹைட்ராலிக்ஸ் எந்திரம் பொருத்தப்படுகிறது. அனைத்து பணிகளிலும் நிறைவடைந்து விட்டதால் வெகு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments