திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியைக் கைப்பற்ற அதிமுக, திமுக இரு கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரம்!!
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவைச் சேர்ந்த முனியன் காலமானதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 09/10/2021 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அனல் பறக்கும் தீவிரப் பிரச்சாரத்தை இரு கட்சியினரும் கையில் எடுத்து வாக்கு சேகரிக்க மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் இரு கட்சிகளும் சம நிலையில் இருப்பதாக நம்பகத்தன்மை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதனால் இரு கட்சியினரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது மேலும் இரு கட்சியினரும் தங்கள் கட்சிகளை பலப்படுத்திக் கொள்ள தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments