சாயப்பட்டறை கழிவு நொய்யல் ஆற்றில் கலப்பதால் மக்களுக்கு கொடூர நோய் தொற்றும் அபாயம்..!!!
திருப்பூர் மாவட்டம் முக்கியத் தொழில் வர்த்தக நகரமாக திகழ்கிறது.. இங்கு டெக்ஸ்டைல்ஸ் தொழில் முதன்மையாக திகழ்கிறது..
திருப்பூரில் இருக்கும் சாயப்பட்டறை குடோன்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலந்து விடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நொய்யல் ஆற்று தண்ணி திருப்பூர் கரூர் வழியே ஓடி காவேரியில் கலக்கின்றது. பல லட்சம் மக்கள் இத் தண்ணீரை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குடிநீருக்காக அதிகம் தண்ணீர் பயன்படுகிறது. கழிவு கலந்த தண்ணீரை குடிப்பதினால் மக்களுக்கு பலவகையான உடல் உபாதைகளும், கேன்சர் போன்ற பெரும் வியாதிகளும் வருவதற்கான அபாயம் கூறுகள் அதிகம் உள்ளது.. தமிழக அரசு சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலக்காமல் இருக்க பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும், அத்து மீறல்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே அரசு உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்களின் நலன் காக்க அதிரடியாக நடவடிக்கை என்ன வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாட்ஷா, திருப்பூர்.
Comments