கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வெடுக...!!
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி அவர்களின் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியானது சென்னையின் மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.
கடந்த சில நாட்களாக கொய்யாத்தோப்பு வீரபத்திர தெரு - ஹாரீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட கழிவு நீர் பாதை அடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் கழிவு நீர் தாராளமாக ஓடுகின்ற பகுதியாக உருமாறியிருக்கின்றது.இதனால் கொரோனா அச்சத்தோடு சேர்த்து தொற்று நோய் அச்சத்திற்கும் பொது மக்கள் உள்ளாகின்றனர்.
உதயநிதி விரைந்து நடவடிக்கை எடுப்பாரா...??
-நவாஸ், சென்னை.
Comments