பொள்ளாச்சியில் பரபரப்பு! 5 மாத குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!!

    -MMH

பொள்ளாச்சி ஆனைமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கீதா தம்பதியர்கள் நான்கு குழந்தைகளுடன் ஒரு வார காலமாக இப்பகுதியில் தங்கி துணி வியாபாரம் செய்து வந்தனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30  மணி அளவில் டிபன் வாங்குவதற்காக கடைக்கு சென்ற நிலையில் சங்கீதா தன் குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர் சங்கீதாவிடம் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணத்தைக் கொடுத்து குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி சங்கீதாவை கடைக்கு அனுப்பி வைத்த நிலையில் மர்ம நபர் பைக்கில் வந்த மர்ம நபருடன் 5 மாத குழந்தையை கடத்திச் சென்றார்.

தகவலறிந்த ஆனைமலை காவல்துறையினர்  குழந்தையை மீட்க கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆதாரங்களோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனைமலை பகுதியில் மர்ம நபர் குழந்தையை நேற்று முன்தினம் கடத்திச் சென்ற சம்பவம் இன்றுவரை பரபரப்பாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments