ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அட்டை இல்லா பணப்பரிவர்த்தனை!! ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்!!
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அட்டை இல்லா பணப்பரிவர்த்தனை மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
ஏடிஎம் -ல் இருந்து பணம் எடுக்க செல்லும் போது, நம்மில் பலரும் ஏடிஎம் கார்டு எடுத்து செல்வதை மறந்துவிடுவோம்.. அல்லது வேறு ஏதேனும் கடைகளுக்கு செல்லும் போது, உடனடியாக பணம் தேவைப்படும் சூழ்நிலையில் நம்மிடம் ஏடிஎம் கார்டு இருக்காது.. ஆனால் டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆம்.. உண்மை தான்.. ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டை இல்லா பணம் எடுக்கும் வசதி (cardless cash withdrawal) இது சாத்தியமாகும்.
இதுகுறித்து ஹெச்.டி,எஃப். சி வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்ட ர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அந்த வங்கியின் ட்விட்ட பதவில் " உங்கள் ஏடிஎம் கார்டை மறந்துவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள், எச்டிஎஃப்சி வங்கி அட்டை இல்லாத பணம் #எக்ஸ்எஃப்எசி வங்கி ஏடிஎம்களில் இருந்து எந்நேரமும் எடுத்துக் கொள்ளலாம்.. ஏடிஎம் / டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கார்டுலெஸ் ட்ரான்ஸாக்ஷன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ .10,000 வரை பணம் எடுக்கலாம்..
அட்டை இல்லாத பணபரிவர்த்தனையை எப்படி மேற்கொள்வது..?
ஒரு பயனாளியைச் சேர்க்கவும் ஒரு பயனாளியைச் சேர்க்க, NetBanking இல் உள்நுழைக, Funds Transfer என்பதன் கீழ - Request - Add a Beneficiary - Cardless Cash Withdrawal என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் பயனாளியின் அனைத்து விவரங்களையும் சேர்த்து உறுதிப்படுத்த அழுத்தவும். சரிபார்ப்புக்காக பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
நீங்கள் சேர்த்த பயனாளிகளுக்கு பணம் அனுப்புங்கள் நெட்பேங்கிங்Funds Transfer என்பதன் கீz - Request - Add a Beneficiary - Cardless Cash Withdrawal- debit bank account என்பதை தேர்வு செய்து, நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் பயனாளியைத் தேர்வுசெய்து விவரங்களைச் சரிபார்க்கவும். பின்னர் தொகையை உள்ளிடவும், சரிபார்ப்புக்காக பெறப்பட்ட உறுதிப்படுத்தல் OTP ஐக் கிளிக் செய்யவும்.
பயனாளிகள் ஹெச்.டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம் பயனாளி ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம் -க்குச் சென்றவுடன், அவர்கள் அட்டையில்லா பண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு வசதியாக இருக்கும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
OTP, பயனாளியின் மொபைல் எண், ஐடி மற்றும் திரும்பப் பெறும் தொகை ஆகிய தகவல்களை சரிபார்க்கப்பட்டவுடன், ஏடிஎம் பணத்தை வழங்கும்..
-சுரேந்தர்.
Comments