தடுப்பூசி இட திரண்ட மக்கள்,பரிதவிக்கும் காவலர்..!

 -MMH    

    கோவை பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம்தில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பொழுது ஆண்கள் பெண்கள் என இரு வரிசைகளாக மக்கள் திரண்டனர். மக்களைக் கேட்டபோது அங்கு அவர்களை அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று புகார் கூறினர்.

 ஆகையால் இறந்த கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து காவலர் ஒருவர் சமூகம் இடைவேளை விட்டும் மாஸ்க் அணிந்தும் நிற்க சொன்னார் இதை கண்டுகொள்ளாத மக்கள் அவ்வாரே காத்துக்கொண்டிருந்தனர்.

 அப்பகுதி மக்கள் சுமார் இரண்டு மணி நேரமாக தடுப்பூசி போடுவதற்கு சாலை ஓரத்தில் நிற்கின்றோம் ஆகையால் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஆனைமலை ஊராட்சி அலுவலர்களிடம் முறையிட்டனர்.

-சா. பிரசாந்த்

Comments