கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் மீது புகார்..!!
கோவை மாவட்ட கலெக்டரை மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் தளபதி முருகேசன் தலைமையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், கலெக்டர் சமீரனை மிரட்டும் தொனியில் அவமரியாதையாகவும் பேசியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments