"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நலத்திட்ட உதவிகள் திருப்பூரில் துவங்கப்பட்டது!!

    -MMH

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. ஸ்டாலின்  அவர்களின் ஆணை படி திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பயனாளிகளுக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் நலத்திட்ட உதவிகளை 

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ்  அவர்கள் வழங்கினார்கள். 

உடன்‌ திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத் I.A.S. அவர்கள், ஊத்துக்குளி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஊத்துக்குளி பேரூர் கழக செயலாளர் ராசுகுட்டி,மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-டாப்ஸ்லிப் பிரசாத்.

Comments