மகுடஞ்சாவடி அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கடந்த ஜூலை 25ல் முன்னால் சென்ற பைக் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அஜித்குமார் மற்றும் அருண் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கபுரம் பகுதியை சார்ந்த அஜித்குமார் வயது 24 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை எடுத்துச்சென்ற பெரம்பலூரைச்சார்ந்த நான்கு பேரை 48 மணி நேரத்தில் சேலம் மாவட்ட காவல்துறை தனிப்படை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Ln.இந்திராதேவி முருகேசன், ச.கலையரசன், மகுடஞ்சாவடி.
Comments