கரடிக்கு வலைவீச்சு..!
கோவை பொள்ளாச்சி வால்பாறையில் இதுவரை கடித்த கரடிக்கு வலைவீச்சு. வால்பாறை வில்லோனி செட்டில்மெண்ட் 27 ஆம் தேதி கரடியால் ஒருவர் பலியானார். அதையடுத்து ஆயர்பாடியில் முன்தினம் இரவில் ஒருவரை கடித்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு செயல் தொடர்வதால் வனத்துறையினர் கரடியை பிடிக்க 30 பேர்கொண்ட வனக்காவலர் குழுவை நியமித்து கரடியை தேடி வருகிறார்கள். கரடிக்காக வனப்பகுதியில் கூடு வைத்திருப்பதாக வனக்காவலர் கூறினார். கரடி பிடிபட்டால் அதனை மருத்துவப் பரிசோதனை செய்து வேறொரு காட்டுக்குள் விட்டுவிடுவோம் என்றார் வனத்துறை அதிகாரி.
சா. பிரசாந்த்.
Comments