போத்தனூர் அருகே முதியவர் அடித்து கொலை

   -MMH

    கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரில் நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். 

போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ரோடு காமராஜர் புரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72).பொன்னுசாமி நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவா (30) என்பவர், நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பொன்னுசாமி மீது மோதுபோல மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார்.மீது மோதுபோல மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் சிவா பொன்னுசாமியை சரமாரியாக தாக்கினார் இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முதியவரை அடித்து கொலை செய்த சிவா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments