காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது!!

    -MMH

சென்னை குரோம்பேட்டையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 25ம் தேதி கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, பள்ளிகரனையில் உள்ள விடுதியில் சிறுமியுடன் தங்கியுள்ளதை கண்டுபிடித்த போலிசார், கிஷோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments