பொள்ளாச்சி மீன்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் பள்ளம்!!

       -MMH

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் பூச்சநாரி அருகே சாலையின் குறுக்கே தண்ணீர் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டு குழாய் இணைப்பு கொடுத்த பிறகு குழியை சரிவர மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது இந்நிலையில் கடந்த நாட்களில்  இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருசிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து  காயங்களுடன் கடந்து சென்றுள்ளனர் இதனால் இப்பகுதியில்  வாகன விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

விபத்துக்கள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர். குழியை உடனடியாக சரிசெய்து மக்களின் பாதுகாப்பான  பயணத்திற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சூரிய பிரகாஷ், பொள்ளாச்சி மேற்கு.

Comments