சிங்கம்புணரி யூனியன் பேருந்து நிறுத்தம் அருகே கூட்டுறவு பல்பொருள் அங்காடி திறப்பு! விற்பனையை துவக்கி வைத்த சங்க தலைவர்!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆர் 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக கூட்டுறவு பல்பொருள் அங்காடி துவக்கப்பட்டது. 

சிங்கம்புணரி திருப்பத்தூர் சாலையில் யூனியன் பேருந்து நிறுத்தம் அருகே கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த அங்காடி மசாலா வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் மற்றும் அனைத்து வீட்டு சமையல் பொருட்கள் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.  இந்த விற்பனை மையத்தில் கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமை ஏற்றார். சங்கத்தின் பொது மேலாளர் குமரகுருபரன், துணைத்தலைவர் இந்தியன் செந்தில் முன்னிலை வகித்தார். விற்பனை அங்காடியை சங்கத்தின் தலைவர் ஏ.வி.நாகராஜன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 

அத்துடன் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தார். உடன் துணைத் தலைவர் இந்தியன் செந்தில், மேலாண்மை இயக்குனர் கபிலன் மற்றும் சங்கத்தின் இயக்குனர்கள், பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

-ராயல்ஹமீது, சிங்கம்புணரி.

Comments