திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு!!
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 876 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 726 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,751 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
-வேல்முருகன், சென்னை.
Comments