விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு! எல்லோருக்கும் கிடைக்குமா?

  -MMH

    தமிழகத்தில்  ஊக்கத்தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு கட்டாயம். இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள புதிதாக திருமணமானவர்கள், மற்றும் இதுவரை ரேஷன்கார்டு இல்லாதவர்கள் என பலரும் தங்களுக்கு ரேஷன் அட்டை வழங்ககோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்து அதன்பிறகு 15 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல்  விண்ணப்பித்து 15 நாட்களில் மக்களுக்கு ரேஷன் கார்டையும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் விண்ணப்பித்து 15 நாட்களுக்கு பிறகு ரேஷன்கார்டு கிடைக்கும் என்ற நிலையில், விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியுள்ளார். காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் பங்கேற்ற அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இநத முறையில் ஏற்கனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வந்துள்ளது. இதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டதை தொடர்ந்து, மீதிமுள்ள கார்டுகள் இன்னும் இரு நாட்களில் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது 2,000 புதிய கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளன. ஏற்கெனவே உள்ள ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்ததும் புதிய கார்டுகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இச்சேவையை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கலாமே என்ற கோரிக்கையோடு,

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments