இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; கடந்த 2 நாட்களை விட சற்று உயர்வு!!

   -MMH

     இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி: நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகள் சற்று குறைந்து உள்ளன.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்று (43,509) மற்றும் நேற்று முன்தினம் (43,654) ஆக இருந்தது.

இதனால் கடந்த 2 நாட்களை விட பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது.  எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 42,360 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது (38,465 பேர்) உயர்வு என்பது ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 344 ஆக உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது நேற்று 4 லட்சத்து 3 ஆயிரத்து 840 ஆக இருந்தது.  கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,23,217 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுவரை மொத்தம் 45 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

-வேல்முருகன், சென்னை.

Comments