சிங்கம்புணரியில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பு மருந்து! திமுக சிறுபான்மை அணி வழங்கியது!
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒன்றியத்தின் ஆயுஷ் துறை பரிந்துரைக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30c கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சிங்கம்புணரி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30c வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நோய்த்தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு சிங்கம்புணரி நகர திமுக சிறுபான்மை அணியின் சார்பில் வழங்கப்பட்டது. அண்ணா நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற எளிய விழாவில் 600 பேருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் யாகூப், மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.சோமசுந்தரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், கேபிள்சாதிக், வழக்கறிஞர் ரவி, பரிஞ்சி சரவணன், இஸ்லாமிய இளைஞரணி தலைவர் அயூப்கான் மற்றும் தவ்ஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments