ஊடகத்தினருக்கு கொரோனா நிதி : முதல்வரிடம் டி.எஸ்.ஆர். சுபாஷ் கோரிக்கை !!
அனைத்து சலுகைகளும் தாலுகா அளவிலும் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஆர்.என்.ஐ பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகளை நடத்தி வரும் ஆசிரியர்கள், உட்பட அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது !
டி.எஸ்.ஆர் சுபாஷ்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வழங்கினர் ! நல வாரியம் அமைத்தல், கொரோனா கால நிதி அனைத்து தாலுகா பத்திரிகையாளர்களுக்கும் வழங்குதல், கொரோனாவால் மறைந்த செய்தியாளர்கள் குடும்ப நல நிதி பத்து லட்சம் ரூபாய் விரைவாக வழங்குதல் உட்பட பல கோரிக்கைகள், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது !
மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், மாநிலத் துணை தலைவர்கள் கோவை ஏ.கே.பிரபாகரன், பொன்னேரி பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கினைப்பாளர் கடலூர் கே.ரமேஷ் குமார், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் தலைவர் எம்.பி.மதிமகாராஜா, தலைமை நிலயச் செயலாளர் "திருத்தணி" விநோத் குமார், தேசியக் குழு உறுப்பினர் "கழுகு" கே.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் V.D.சிவமூர்த்தி,
தென் சென்னை மாவட்ட தலைவர் A.லட்சுமணன், மாநில அமைப்புச் செயலாளர் "லயன்" டாக்டர் எல்.பரமேஸ்வரன், இலக்கியப் பிரிவு செயலாளர் " கவிஞர்" PSP விஜயபாலா, மற்றும் நிர்வாகிகள் "ஸ்டிக்கர்" சுரேஷ், "அன்புக் கரங்கள்" அப்துல் லத்தீப், இன்சூரன்ஸ் கௌரி மேடம் ஆகியோர் இணைந்து முதல்வரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இந்த முயற்சி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-ஊடகவியலாளன் மற்றும் செய்தியாளர் ஆர்.கே.பூபதி.
Comments