தமிழகத்தின் நேற்றைய கொரோனா நோய்த்தொற்று நிலவரம்!!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 22,645 பேரும் மற்ற மாநிலத்தவர் 6 பேரையும் சேர்த்து 22,651 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 463 பேர் உயிரிழந்து உள்ளனர். 33,646 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 14 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 23 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
தஞ்சையில் நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக 1000 என்ற எண்ணிக்கையை கடந்த நிலையிலேயே காணப்படுகிறது.
திருவையாறு, பூதலூர், நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் அதிகமான அளவிலான மக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் மக்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .
தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,033 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 22,651 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று மட்டும் நோய்த்தொற்றின் காரணமாக 463 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,004 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 6766 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments