தமிழின் தகப்பனுக்கு திருச்சி கவிஞர் செல்வராணி வாழ்த்துக் கவிதை..!

 

-MMH

தமிழின் தகப்பனே

அப்பா! 

உங்களோடு நின்றெடுத்த 

ஒரு நிழல் படம் கூட 

என்னிடம் இல்லை

உங்களின் அருகில் 

நின்று  பேச நினைத்தேன் 

அதுவும் நடக்கவே இல்லை

காக்கி உடையில்

உங்களின் வருகைக்காக

காத்துக்கிடந்திருக்கிறேன் 

நீங்கள் பேசிய செம்மொழி கேட்டு வியந்து பார்த்திருக்கிறேன்

கைக்கெட்டும் தூரத்தில்

என்னை நீங்கள் கடந்து போனதுண்டு

காக்கி உடையில் கடமை 

மீறாமல் நான் உங்களை

காத்து நின்றதுண்டு

                                  திருச்சி கவிஞர் செல்வராணி

இப்படியெல்லாம் நடக்குமென்று

அப்போதே தெரிந்திருந்தால்

ஓடிவந்து உங்களிடத்தில்

ஒரு வார்த்தை பேசியிருப்பேன்

உங்களின் எழுதுகோலால்

ஒரு வார்த்தை

எழுதி வாங்கி இருப்பேன்

எதுவுமே நடக்கவில்லை ஆனால்

எல்லாமே நடந்து விட்டது

இப்போதும் ஒன்றுமில்லை 

நான் செல்லுகின்ற இடமெல்லாம்

உங்கள் பெயர் தான் சொல்கிறார்கள்

இதைவிட வேறென்ன வேண்டும்? 

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா...!!

நன்றி -கவிஞர் செல்வராணி

-தொகுப்பு - ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.

Comments