திருச்செங்கோட்டில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரோப் கார்!! - மக்கள் மகிழ்ச்சி..!!

     -MMH

     நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த சிவன்மலையில் பார்வதி சிவன் சுவாமி தரிசனம் பெற பக்தர்கள் அனைவரும் மலைமேல் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் வயது முதிர்ந்தவர்களுக்கு  கடினமாக இருப்பதால் குழந்தைகள்  முதியவர்கள் பெண்கள் பயன்பெறும் வகையில் இந்து அறநிலை துறை சார்பாக பக்தர்களுக்கு ரோப்கார் வசதி செய்து தர முடிவெடுத்து இருந்த நிலையில் உடனடியாக ரோப் கார் நிறுவும் பணி தொடங்கியது.

சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த பிறகு பக்தர்கள் மேல் இருக்கும் சிவன் மலைக்கு இலகுவாக செல்வதற்கு வழிவகுக்கப்படும் என்று அங்குள்ள கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த உலக பிரசித்தி பெற்ற பார்வதி சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது இதனுடைய சிறப்பம்சமாகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரஞ்சித் திருச்செங்கோடு, ஈசா.

Comments

Anonymous said…
இந்த தகவல் தவறு திருச்செங்கோடு மலைக்கு ரோப்கார் வசதி அமைக்கப்படும் என்று அறிவிப்பு அமைச்சர் அறிவித்துள்ளார் மேலும் நீங்கள் போட்ட பதிவு ராணிப்பேட்டை மாவட்டம் நலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அமைப்பட்ட ரோப்கார் அதான் சோதனை ஓட்டம் இந்த பதிவு