தங்க இடமின்றி, வேலையின்றி, உணவின்றி, தவிக்கும் - தமிழக மக்கள்!!
கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அந்த கொடிய நோய்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால் வேலையின்றி மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் அண்டை மாநிலமான கேரளாவில் பைப்லைன் எடுத்தல், கிணறு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர் நோய்த்தொற்று பரவல் காரணமாக கேரளாவில் வேலை செய்து வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை கேரளாவில் இருந்து வெளியேற்றியது அம்மாநில அரசு தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேற்கொண்டு எங்கு செல்வது என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகளுடன் தங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்பதைக் கண்டு தன்னை அறியாமல் கண்ணீர் வடித்து நின்றனர் பின்பு அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் தங்களை தற்காத்துக்கொள்ள தற்கால குடில்கள் அமைத்து இருக்கின்றனர்.
இதை அறிந்த மக்கள் நீதி மையத்தின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் அம்பராம்பாளையம் கமல் பாவா, கிளை செயலாளர் சுப்பிரமணியம், அம்பராம்பாளையம் உதயகுமார், சிங்காநல்லூர் ஊராட்சி செயலாளர் பிரியா, அங்கலக்குறிச்சி ஜெகன், அம்பராம்பாளையம் சதாசிவம் ஆகியோர் நேரில் சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அனைவருக்கும் முதற்கட்டமாக கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
வேலையின்றி வருமானமின்றி இருப்பிடம் இன்றி குழந்தையுடன் தவிக்கும் இவர்களுக்கு நல்ல குணமும் மனமும் படைத்தவர்கள் உதவிட வேண்டும் என்கிறார்கள் மக்கள் நீதி மையத்தினர் இவர்களுக்கு உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8526174266.
-S.சசிகலா, ஆனைமலை.
Comments