ஆரம்ப சுகாதார நிலையத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..!!
கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் டி கே அமுல் கந்தசாமி எம்எல்ஏ அவர்கள் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து வருகிறார் நேற்றையதினம் முடிஸ் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகை தந்து கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்து வந்தார்.
இங்கு வரும் புறநோயாளிகள் சிகிச்சைக்கு வரும் பொழுது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் மேலும் இம் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றி தருமாறு நமது மருத்துவர் பாபு லட்சுமணன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் நகர செயலாளர் கணேசன் அவர்களும் பொன் கணேஷ் அவர்களும் 15-ஆவது வார்டு செயலாளர்கள் உடனிருந்தனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-செந்தில். திவ்யகுமார்.ஈசா.
Comments