தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு OPS மீண்டும்,மீண்டும்,மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்!!

 

-MMH

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவர் மூன்று முறை நன்றி தெரிவித்திருப்பது ஆச்சர்யமான ஆரோக்கியமான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அண்மையில் ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் அடுத்த ஒரு நாளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூ பாய் வைப்பு நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஓபிஎஸ்  அண்மையில் தேனியில் நடந்த திமுக அமைச்சர்கள் நடத்திய அரசு துறை கூட்டங்களில் எம்எல்ஏ என்ற முறையில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். முதல் அமைச்சர் ஐ பெரியசாமியின் கூட்டத்திலும் மறுநாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடத்திய கூட்டத்திலும் பங்கேற்று ஆலோசனைகளை வழஙகினார். தொடர்ந்து எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், முதல்வர் ஸ்டாலினுடனும், திமுக அரசுடன் ஆரோக்கியமான போக்கை கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் ஓபிஎஸ் மென்மையாக நடந்து கொள்ளும் அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டானுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

-ருசி மைதீன்.

Comments