சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி! பொதுமக்கள் பலனடைந்து கொள்ள அறிவுறுத்தல்!!
தமிழகம் முழுவதும் கொரொனா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையிலும் சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரின் கூட்டு முயற்சியால் நோய்த்தொற்று கட்டுக்குள் உள்ளது. மேலும், சிங்கம்புணரி சுற்றுவட்டார பொதுமக்களை கொரொனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாகக் காக்கும் பொருட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களுக்கு மருத்துவமனையிலேயே இணையத்தில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மட்டும் கொண்டு வரவேண்டும்.
தடுப்பூசி வீணாவதைத் தவிர்க்க 10 பேர் சேர்ந்த பின்பு, பதிவு செய்திருப்பவர்களை அழைத்து தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் போட்டுக் கொள்ள விரும்புபவர்களும் இதே முறையில், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த கொரானா பெருந் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments