திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்..!!
தமிழகத்தில் இன்று மே 15 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் அனைத்து நிறுவனங்களும் செயல்பட அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் தனியார்.
பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாட்கள் வேலை செய்ததையும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனால் அந்த நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது ஊரடங்கு சட்டம் விதிமீறல், தொற்று நோய் விழிப்புணர்வு விதி மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-குமார் திருப்பூர்.
Comments