பத்திரிக்கையாளர்கள் வாழ்வில் மீண்டும் ஒரு மைல்கல்!! தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு!!
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்- மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுகவின் சட்ட மன்ற தலைவர் திரு மு. க .ஸ்டாலின் அவர்கள் இன்று பத்திரிகையாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் .அதன்படி பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இன்று முதல் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும்.
மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடகத் துறையினர் உழைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த பேரிடர் காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments