வேவர்லி பொதுமக்கள் எழுதுகிற பொதுவான விண்ணப்பம்!!
அன்புடையீர்!
வணக்கம்;
ஐயா! கடந்த நாட்களில் எங்களுடைய எஸ்டேட் பகுதியிலிருந்து தேவையான காரியங்களுக்காக வால்பாறை மற்றும் அரசாங்கம் அனுமதிக்கிற பொதுவான நிகழ்ச்சிகள் கூட அதாவது திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட காரியங்கள் கூட 15 நபர்கள் அனுமதிக்கும்போது இந்த பகுதியிலிருந்து ஒருவர் கூட வெளியே அனுப்பாமல் இருக்கிறது; அதிகாரிகள் தங்கள் சுயநலத்திற்காக செயல்படுவது போல் இருக்கிறது; மேலும் இதர பொருள்கள் வாங்குவதற்கும் கூட சூழ்நிலைகள் இல்லாமல் இருக்கிறது.
இங்கு இருக்கிற அதிகாரிகள் அவர்களுடைய வீடுகளுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்று இருக்கிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் இல்லை,சில சமயங்களில் மருத்துவ உதவி கூட சரியான படி இல்லாத காரணத்தினால் நாங்கள் கட்டாயமாக வெளியே செல்ல வேண்டும் ;அதற்கு உங்களுடைய உதவி எங்களுக்கு தேவை தயவு செய்து உதவி செய்தருலும் படி தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
வேவர்லி பொதுமக்கள்.
-செந்தில், வால்பாறை தெற்கு.
Comments