சென்னையினைவிட்டு கிளம்பிய ஆயிரக்கணக்கானோர்!!
தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு இன்று முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கபடவிருப்பதை ஒட்டி நேற்று மற்றும் சனி ஆகிய இருதினங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை மற்றும் காய்கனிகளை வாங்கினர். இன்னும் சிலரோ மேலும் தளர்வில்லா ஊரடங்கினை தங்கள் ஊர் உறவினர்களுடன் கழித்திடலாம் என்று பலர் அரசின் வழிமுறைகளின்ப்படி பேருந்துகளிலும் , இன்னும் சிலர் ஆட்டோ , குட்டி யானை , இருசக்கர வாகனங்களிலும் சென்னையினை விட்டும் கிளம்பினர்.
போக்குவரத்து துறையின் அறிக்கையின்படி நேற்றைய மாலை 6மணி நிலவரமானது 1331 அரசு பேருந்துகளின் மூலம் 65746 பயணிகள் கோயம்பேடு மற்றும் தாம்பரம் முனையங்களின் மூலம் சென்றுள்ளார்கள் , ஒட்டுமொத்தமாக இவர்களின் பயணமானது செங்கல்பட்டு சுங்கச்சாவடியின் ஊடாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடந்ததால் போக்குவரத்து நெரிசலில் "செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி " பல மணிநேரங்கள் ஸ்தம்பித்தன.
-நவாஸ்.
Comments