திருவாரூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் நாட்டு நலப்பணி வழிகாட்டி மையம் துவக்கம்..!!
பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய பயனாளிகளுக்கு உதவும் வகையில் நாட்டுநலப்பணித் திட்டஅமைப்பு அமைத்துள்ள வழிகாட்டி மையத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பாக பணியாற்றுமாறு கூறினார்கள்.
இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள், திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.M.ராமன் அவர்கள், திருவாரூர் கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் திரு.D.பார்த்தசாரதி அவர்கள், மன்னார்குடி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் திரு.R.மணிவண்ணன்*அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் மாநில நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில்குமார், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள், ஜூனியர் ரெட்கிராஸின் பொறுப்பாசிரியர்கள், ரெட்கிராஸ் லயன்ஸ் ரோட்டரி சங்க தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
- பார்த்திபன் ரைட் ரபீக்.
Comments