பணம் வேண்டாம்.. பசித்தவர்கள் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்... மன்னார்குடி இளைஞர்கள் அசத்தல்..!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழுஊரடங்கு காரணமாக கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்காக இயற்கை ஆர்வலர் ஐயா நம்மாழ்வார் வழிகாட்டுதலின் படி மன்னார்குடியை சேர்ந்த நம்மாழ்வார் நண்பர்கள்.
இவர்கள் இணைந்து தங்களால் இயன்ற மதிய உணவு மற்றும் குடிநீரை உணவின்றி வருபவர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி பணம் வேண்டாம் பசித்தவர்கள் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். என்ற வாசகத்துடன் இலவசமாக உணவை வழங்கிவருகிறார்கள். இந்த சேவை முழு ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்றும் கூறுகிறார்கள் மன்னார்குடி நம்மாழ்வார் நண்பர்கள்.
நாளையவரலாறு செய்தித்தாளுக்காக
-பார்த்திபன், ரைட் ரபிக்.ஈசா.
Comments