துப்புறவு பணியாளர் கொரானா தொற்றால் மரணம் !!!
கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்தவர் காளிமுத்து, இவருடைய மனைவி வேளாங்கண்ணி (வயது 45). இவர் கிணத்துக் கடவு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.
Comments