கோரோனா ஊரடங்கால் இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும்.? மின் வாரியம் விளக்கம்.!
கோரோனா ஊரடங்கால் இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற விளக்கம், மின் வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோரோனாஊரடங்கு காரணமாக,மின் வாரிய ஊழியர்கள், மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்க்கின்றனர்.
எனவே, நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து, வாட்ஸ்அப் மூலம் மின் வாரிய செயற்பொறியாளருக்கு அனுப்பிவைத்தால், அவர்கள் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்து, அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள். பிறகு மின் கட்டணத்தை செலுத்தலாம். அல்லது 2019-ம் ஆண்டு மே மாத கட்டணத்தை உத்தேசமாக செலுத்தலாம். அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் கருதினால், கடந்த மார்ச் மாத கட்டணத்தை செலுத்தலாம்.
அந்த கட்டணம் வரும் ஜுலை மாதம் செலுத்தப்படும் மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக நுகர்வோரிடம் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்பட்டு, வரும் ஜுலை மாதத்தில் எவ்வாறு முறைப்படுத்தப்படும் என்பது தொடர்பான விளக்கத்தை தமிழகமின் வாரியம் தனது இணையதளத்தில் (www.tangedco.gov.in)வெளியிட்டுள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-சுரேந்தர்.
Comments